ChPubLib header image
செங்கலடி பொது நூலகத்தின் சமூகப் பங்களிப்பும் அதன் சவால்களும்

நூலகமானது ஒரு மனிதனுடைய இதயம் போன்றதாகும். அந்த அளவுக்கு மனிதனுடன் பிண்ணிப்பிணைந்துள்ளது. ஒரு நாட்டில் நூலகம் எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளதோ அந்த அளவு நாடு சகல மட்டத்திலும் அபிவிருத்தியை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.
ChPubLib old image

இந்தவகையில் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் எல்லைக்குள் செங்கலடி என்னும் கிராமத்தில் ஆரம்பகாலத்தில் நூலகம் அமைந்திருக்கவில்லை. அக் காலகட்டத்தில் மக்கள் தங்கள் கைவசமுள்ள பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் என்பவற்றைக் எடுத்துச் சென்று காளையடி என்று அழைக்கப்படும் இடத்தில் ஆலமரத்தடியில் மரக்குற்றியில் அமர்ந்து வாசித்துள்ளர். இதனை கண்ணுற்ற அப்பிரதேச செயலாளர் இங்கு மக்கள் வாசிப்பதற்கும், படிப்பதற்கும் கட்டாயமாக நூலகம் அவசியம் என்பதனை உணர்ந்து தமது பிரதேச செயலக நிதியில் இருந்து சிறுதொகை பணத்தைக் கொண்டு 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிய நூலகத் தொகுதி ஒன்றினை ஆரம்பித்து வைத்தார். இவ்வாறு உள்ளூராட்சி மன்றமான ஏறாவூர்பற்று பிரதேச சபையினை தாய் நிறுவனமாக செங்கலடி பொது நூலகம் கொண்டுள்ளது.

இக்கிராமம் ஏறத்தாழ 25,000ம் மக்களை உள்ளடக்கியதாகும். இந்நூலகமானது 1500 சதுர அடிப் பரப்பைக் கொண்டது. இது மூன்றாந்தர நூலகமாகும். இங்கு எழுநூற்றைம்பதுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களையும் பயனடைகின்றனர். சுமார் 7600 க்கு மேற்பட்ட நூல்கள் காணப்படுவதுடன் இந்நூலகத்தின் அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு வாசகர் வட்டம், ஆலோசனைக்குழு என இருகுழுக்கள் அமைக்கப்படடுள்ளன. இதில் பிரதேசத்தில் வாழும் பாமரமக்கள் தொடக்கம் உயர் கல்விமான்களையும் கொண்டதாக உள்ளது. இந்த நூலகமானது போரின் போது முற்றாக அழிக்கப்பட்டது. இதற்கு முன்னிருந்த கட்டிடத்தில் செல் வீச்சில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நூல் நிலையமானது வேறு இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தற்காலிகமாகவே நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாய தொழிலே பிரதானமானது ஆகும். இந் நூலகத்தை பயன்படுத்தும் வாசகர்கள், நாளாந்தவாசகர்கள். தமது அறிவை வளப்படுத்துவதற்காக பயன்படுத்தும் வாசகர்கள்இ பெண்கள்இ சிறுவர்கள், விதவைகள், கர்ப்பிணிகள் என பல்வகையினரும் பயன்படுத்துகின்றார்கள்.

இந் நூலகத்தினால் மக்களுக்கு பல சேவைகள் வழங்கப்படுகின்றன. அதாவது இரவல் வழங்கும் சேவை, உசாத்துணைசேவை, சிறுவர்களுக்கானசேவை, நடமாடும் சேவை, மருத்துவசேவை எனப் பல சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நூலகத்தினை கர்ப்பவதிகளும் பயன்படுத்துகின்றார்கள் .எமது நூலகத்தினை பயன்படுத்தும் கர்ப்பவதிகளினாலும் பிறக்கும் குழந்தைகள் முன்பே தனது அறிவை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. அத்துடன் அவர்களுக்கு தனியான இடவசதியும், விசாலமான இடமும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருந்த இடத்திலேயே நூல்களை பயன்படுத்துவதற்கு நூலக சேவகர்கள் உதவி செய்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு கர்ப்ப காலத்திற்கான ஆலோசனைநூல்கள், குழந்தை வளர்ப்பு முறை கொண்ட நூல்கள், மருத்துவர்களின் ஆலோசனை கொண்ட நூல்கள், கர்ப்பவதிகளுக்கான சஞ்சிகைகள், கையேடுகள், அவர்களுக்கு பத்திரிகைகளில் வரும் ஆலோசனைகள் என்பன வழங்கப்படுகின்றன.

அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு நூலகத்தில் தனியே ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குரிய தேவைகளை நூலக சேவகர்களினூடாக பூர்த்தி செய்து கொடுக்கின்றோம். இந் நூலகத்தை சிறுவர்களும் பயன்படுத்திவருகின்றனர். 'இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்' என்பதற்கு அமைய சிறுவர்களை கவரக் கூடிய வகையில் சிறுவர் நூலகமும் காணப்படுகின்றது. அவர்களை வாசிப்பதை தூண்டும் வகையில் சுவர்களிலே வரையப்பட்டுள்ளச் சுவர்ச் சித்திரங்களும், மாணவர்களுடைய ஆக்கங்களும் சுவர்களில் காணப்படுவதும், சிறுவர்களுக்கான ஆங்கில பல்லூடக நிகழ்ச்சித் தொகுதி புத்தகவடிவிலும், இறுவட்டுவடிவிலும், வோல்ட்டர் வோல்ட்டர் நூல்களினூடாகவும் ஆங்கில உச்சரிப்பினை சிறுவர்களுக்கு வழங்குவதனூடாக ஆங்கில உச்சரிப்பை வளப்படுத்துவதாகவும், ஆங்கில அறிவை மேம்படுத்தவும் வழிகோலுகின்றது.. அத்துடன் தொலைக்காட்சியின் ஊடாக சிறுவர் காட்டூன், சிறுவர் நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுவதுடன் சிறுவர்களுக்கான கதை சொல்லும் நேரம் என்பனவூடாக சிறுவர்களை நூலகத்திற்கு வருவதற்கான ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.

இவற்றுடன் மாணவர்கள் தமது கல்வியறிவை மே;படுத்துவதற்காக நூல்கள்இ புதினப்பத்திரிகைகள்இ சஞ்சிகைகள் போன்றவற்றை படிப்பதனூடாக தமது அறிவுப்பசியை மேலும் மேலும் அதிகரிக்க சிறந்த இடமாக நூலகம் திகழ்கின்றது. பாடசாலை மாணவர்களைக் கொண்டு வாசகர் வட்டம் அமைக்கப்படுவதனால் வாசகர் வட்டத்தின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு நடமாடும் நூலக சேவை வழங்கப்படுகின்றது. அன்று மாணவர்களாக இவைகளை தேடி வந்து கற்றலை விருத்தி செய்த பலர் இன்று உயர் பதவிகளான அரச நிர்வாக சேவைஇ அரச கல்விச் சேவைஇ வைத்தியர்கள்இ ஆசிரியர்கள்இ அபிவிருத்திஉத்தியோகத்தர்கள் என பல்வேறுபட்ட துறைகளில் முன்னணியில் வகிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் கணனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும் இணைய வசதி மேலோங்கி இருப்பதனாலும் நாளாந்தப் பத்திரிகைகளில் வரும் புதிய கணனி தொடர்பான விடயங்களை அறிந்து கொண்டு தமது அறிவை வளர்ச்சியடைய மாணவர்கள் நூலகத்தினை நாடியே வருகின்றனர். கணனி வசதிகளைப் பொருத்தமட்டில் இக்கால சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் பிரதேச சபையின் ஊடாக ஒருகணனியினைக் கொண்டு நன்மை அடையும் வகையில் கற்றல் தொடர்பான தகவல்களை வழங்கக் கூடியதாகவுள்ளது.

வேலையற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு நாளாந்தபத்திரிகைகள், வாராந்தபத்திரிகைகளில் வரும் தொழில்வாய்ப்புக்கள் மற்றும் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வர்த்தமானியில் காணப்படும் அரச வேலைவாய்ப்புக்களைத் தமது விளம்பர பலகைகளில் விளம்பரப்படுத்துவதன் ஊடாக வேலைவாய்ப்பு வசதியினை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. அத்துடன் வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவங்களை நூலகத்தில் காணப்படும் இணைய வசதியூடாக பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. இதனூடாக இளைஞர் யுவதிகள் இலகுவாக பயனைப் பெறுவதாகவுள்ளது.

எமது பிரதேசசபைக்குட்பட்ட ஏனைய இடங்களில் காணப்படும் நூலகங்களுக்கிடையே உள்ளக நூல் இரவல் வழங்கும் முறையினை நடைமுறைப்படுத்துவதுடன் வாசகரின் தேவைக்கேற்ப வசதி ஏற்படுத்திக் கொடுப்பதூடாக அமைந்துள்ளது. வருடாவருடம் கொண்டாடப்படும் தேசியவாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாசிப்பு மாதம் தொடர்பான பதாதைகள் காட்சிப்படுத்தப்படுகின்றது. மாத ஆரம்பம் முதல் மாத இறுதி வரையான காலப்பகுதியில் இலவசமான நூலக அங்கத்துவம் பாடசாலை மாணவர்களுக்கும், ஏனைய வாசகர்களுக்கும் வழங்கப்படுகின்றன. அத்துடன் அருகிலுள்ள பாடசாலைகளில் கீழ்நிலை மாணவர்களுக்கு வாசிப்பு முகாம் நடாத்தி வாசிப்பினை ஊக்குவித்து பரிசில்களும் வழங்கப்படுகின்றது. வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பதனை காட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்;சிகள்இ வீதிநாடகங்கள் ஊடாக பாமரமக்களையும் அறிவு சமூகத்தினுள் நுழையும் வாசலாக வாசிப்புமாதம் வெளிப்படுத்துகின்றது.

அடுத்தபடியாக இந் நூலகத்தினை விதவைப் பெண்கள் பயன்படுத்துவதை காணமுடிகின்றது. பத்திரிகைகளிலும் நூல்களிலும் வெளியிடப்படும் புதிய கைத்தொழில் முறைகளை கொண்டு தமது வாழ்வாதாரத்தினை பெருக்கிக் கொள்ளும் இடமாகவும்,வளமாக்கும் இடமாகவும் நூலகம் காணப்படுகின்றது. இந் நூலகமானது வாசகனுடைய உடனடித் தேவைகளை உசாத்துணைச் சேவையினூடாக வழங்கிக் கொள்வதுடன் இலவச இணைய வசதியினையும் வாசகருக்கு வழங்கி அறிவு வழங்கும் இடமாகவும் பொழுதை கழிக்கும் இடமாகவும் காணப்படுகின்றது. கடந்த கால யுத்தத்தினால் உளரீதியாக பாதிப்படைந்த மக்களுக்கு அவர்களை ஒரு நிலைப்படுத்தும் வகையில் சஞ்சிகைகள்இ பத்திரிகைகள் இநூல்கள்இ தொலைகாட்சிகளில் அறிவுசார்ந்த நிகழச்;சிகளை ஒளிபரப்பு செய்து ஆரோக்கியமான வாழ்வுக்கு நூலகம் அவசியம் என்பதனை புலப்படுத்தியுள்ளது. நூலகத்தின் வளர்ச்சிக்கு பிரதானமாக இங்கு காணப்படுவது தகவலை வாசகர் வந்து இலகுவாக அடைய கூடிய பட்டியலாக்கம்இ பகுப்பாக்கம். பகுப்பாக்க முறையில் வாசகன் இலகுவாக வந்து நூல்களை அடைய கூடிய வர்ண முறையாகும.; இதனால் நூலகவியல் தந்தையின் 'வாசகர் நேரம் பேணப்படுதல் வேண்டும்' எனும் பதம் திகழ்கின்றது.மக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் சவாலாக காணப்படும் டெங்குஇ வைரஸ்இ புற்றுநோய்இ நீரிழிவு நோய் போன்ற பாரிய நோய்களில் இருந்து மக்கள் விடுதலை அடைவதற்கான வழிகளை வைத்தியர்களை கொண்டு இலவச கலந்துரையாடல்களை நடாத்தி அவர்களை விழிப்படைய வைக்கும் இடமாகவும் நூலகம் காட்சியளிக்கின்றது.

1. இடப்பற்றாக்குறை : இந் நூலகத்திற்கென ஒரு கட்டிடம் இல்லை. வேறு கட்டிடத்திலேயே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. நூலகக் கட்டிடமானது யுத்தத்தின் போது அழிக்கப்பட்டு விட்டது.
2. வளப்பற்றாக்குறை
3. ஆளணிப்பற்றாக்குறை
4. நிதிப் பற்றாக்குறை
5. குறைந்தளவு தகவல் தொழில்நுட்ப வசதி
6. ஸ்மாட்போன்களின் வசதி அதிகரித்தமையால் நூலகத்தை வாசகர்கள் பயன்படுத்தும் வீதம் குறைவாகவே உள்ளது.
7. தேவையான புத்தகங்கள் இன்மை.
8. நவீன வசதிகளுடனான நூலகம் இன்மை.
9. நூலகத்திற்கான கேட்போர் கூடம் இன்மை.
10. சிறுவர் பகுதி பெரிதாக இன்மை.
11. நூலகத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் இன்மை.
12. நூலகத்திற்கான போதியளவு கணனி வசதி இன்மை.
15. நூலகத்திற்கான கணனி வலையமைப்பு இன்மை.

எனவே இவற்றினை பிரதிபலிக்கும் இடமாக நூலகம் காணப்பட்டாலும் இவ்வாறான பல சவால்களுக்கு மத்தியிலே தமது சேவையினை வழங்குகின்றது. இன்றைய நவீன தகவல் தொழிநுட்ப உலகின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் இடமாக பொது நூலகத்துவத்தின் சமூகப் பங்களிப்பும் அதன் சவால்களும் இலக்குகளை நோக்கிய புலமைத்துவம் என்பதில் ஐயமில்லை. .

Log in to your account:
பயன் தரும் கல்வி வளங்கள்
Useful Education Resources

தரம் 1 தொடக்கம் க.பொ.த (உயர் தரம்) வரையான மாணவர்களுக்கு e-தக்சலாவ

ChPubLib header imageநூலகம்
கல்வி வளங்களின் தொகுப்பு
பல்லூடக ஆவணகம்
மின்னூல்கள் பதிவிறக்க

உங்கள் கணக்கிற்கு உள்நுழைய

Public Library, Chenkalady, Batticaloa
© 2018.
All rights reserved.
Powered by Koha