ChPubLib header image
வாசகர் சேவைப் பிரிவுகள்

1.பத்திரிகை, சஞ்சிகை பிரிவு
2.உசாத்துணை பகுதி
3.இரவல் வழங்கும் பிரிவு
4.சிறுவர் பிரிவு
5.களஞ்சிய பிரிவு
6.தன்னியமாக்கல் பிரிவுப

வரவேற்பு கருமபீடம்

இங்கு நூலக அங்கத்துவப் படிவம், நூல்களைத் இலகுவாக அடையாளங்காணல்,மேலும் கனணி மயப்படுத்தப்பட்ட நூல் விவரன பட்டியல் மூலம் ஊடாக வாசகர் தேவைக்கு ஏற்ப இனம் கானக் கூடியதாக வசதி காணப்படுகின்றது. இவற்றுடன் ஏனைய தகவல்களையும் பெறக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன.

பத்திரிகை,சஞ்சிகை பிரிவு

இந்நூலகத்தில் நாளாந்த பத்திரிகை, வாராந்த பத்திரிகை, மாதாந்த பத்திரிகையென பல தரப்பட்ட பத்திரிகைகள் காணப்படுகின்றன. வாசகர்களது வாசிப்புத் திறனை ஊக்குவிப்பதாகவும் வாசகர் தேவை கருதியும் வீரகேசரி, தினகரன், தினக்குரல் மெற்றோ, டெயிலி நியுஸ், தமிழ் மிரர், நவமணி போன்ற நாளாந்த பத்திரிகைகளும் மித்திரன் மற்றும் சுகவாழ்வு, ஜோதிடகேசரி, வானவில் போன்றன வாராந்த, மாதாந்த பத்திரிகைகளாகவும் குமுதம், ஆனந்த விகடன், அவள் விகடன், டாக்டர் விகடன், சுட்டி விகடன், மங்கையர்மலர், கற்கண்டு, பக்தி, ஹெல்த், குங்குமம், தென்றல், கதிரவன் போன்ற சஞ்சிகைகளும் நூலகத்தில் காணப்படுகின்றன.

உசாத்துணை பிரிவு

இப் பகுதியில் வாசகர் தேவைக்குரியதும்,அரிய நூல்களும் உள்ளன. இன் நூல்களை வெளியே எடுத்து செல்ல முடியாது. நூல்களை நூலகத்தில் வைத்து பயன்பெற முடியும்.

இரவல் வழங்கும் பிரிவு

இன் நூலகத்தில் இரவலாக நூலை கொண்டு செல்வதாயின் செங்கலடி பிரதேசத்தினை அண்மித்த வாழ்பவராயிருத்தல் கட்டாயமானதாகும். இங்கு DDC 21ம் பதிப்பினைக் கொண்டு நூல்களுக்கு பகுப்பாக்கம் செய்யப்பட்டுள்ளது. வாசகர்கள் இலகுவாக நூல்களை இனம் காணக்கூடியதாக நூல்களுக்கு Barcode ஒட்டப்பட்டுள்ளது. AACR 11 விதியைக் கொண்டு பட்டியலாக்கமும் செய்யப்பட்டுள்ளது.

சிறுவர் பிரிவு

இந்த நூலகத்தை சிறுவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். 'இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்' என்பதற்கு அமைய சிறுவர்களை கவரக் கூடிய வகையில் சிறுவர் நூலகமும் காணப்படுகின்றது. அவர்களை வாசிக்கத் தூண்டும் வகையில் சுவர்களிலே வரையப்பட்டுள்ள சுவர் சித்திரங்களும், மாணவர்களுடைய ஆக்கங்களும், சுவர்களில் காணப்படுவதும், சிறுவர்களுக்கான ஆங்கிலப் பல்லூடக நிகழ்ச்சித் தொகுதி புத்தகவடிவிலும், இறுவெட்டு வடிவிலும், வோல்ட்டர் நூல்களினூடாகவும் ஆங்கில உச்சரிப்பினை சிறுவர்களுக்கு வழங்குவதனூடாக ஆங்கில உச்சரிப்பை வளப்படுத்துவதாகவும், ஆங்கில அறிவை மேம்படுத்தவும் அமைகின்றது. அத்துடன் தொலைக்காட்சியின் ஊடாக சிறுவர் கார்ட்டூன், சிறுவர் நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுவதுடன் சிறுவர்களுக்கான கதை சொல்லும் நேரம் என்பனவூடாக சிறுவர்கள் நூலகத்திற்கு வருவதற்கான ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.

களஞ்சிய பிரிவு

இப் பகுதியில் முடிவுற்ற மாத பத்திரிகைகள், சஞ்சிகைகள், உடைந்த தளபாடங்கள் என்பவற்றைச் சேமிக்கும் இடமாக காணப்படுகின்றது.

தன்னியமாக்கல் பிரிவு

இவ் நூலகமானது திறந்த நூலக மென்பொருளான KOHA வை மையமாகக் கொண்டு முற்றாக கனணி மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் நூலகமானது CLOUD COMPUTING SYSTEMS ஊடாக தனது சேவையை வழங்கின்றது. இன் நூலகம் இலங்கை பொது நூலக வரலாற்றில் முதலாவது CLOUD COMPUTING SYSTEMS முலமான சேவையை வழங்குவதில் தடம் பதித்துள்ளதுடன் மகத்தான சேவையை வழங்கின்றது.

Log in to your account:
பயன் தரும் கல்வி வளங்கள்
Useful Education Resources

தரம் 1 தொடக்கம் க.பொ.த (உயர் தரம்) வரையான மாணவர்களுக்கு e-தக்சலாவ

ChPubLib header image



நூலகம்
கல்வி வளங்களின் தொகுப்பு
பல்லூடக ஆவணகம்
மின்னூல்கள் பதிவிறக்க

உங்கள் கணக்கிற்கு உள்நுழைய

Public Library, Chenkalady, Batticaloa
© 2018.
All rights reserved.
Powered by Koha